பொங்கல் பை அளித்த அமைச்சருக்கு கொரோனா! – மருத்துவமனையில் அனுமதி!
சமீபத்தில் பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் காமராஜ்க்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பையும், பணமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வை நேற்று முதல்நாள் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மன்னார்குடியில் மக்களுக்கு பொங்கல் பை வழங்கி தொடங்கி வைத்தார்.
பிறகு சென்னை வந்த அவருக்கு உடல்சோர்வு ஏற்பட்டதால் சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் கடந்த சில நாட்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.