வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 செப்டம்பர் 2020 (11:05 IST)

அழைப்பிதழில் ஓபிஎஸ் பெயர் போடாதது ஏன்? – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

அதிமுக செயற்குழு கூட்ட விவகாரத்தை தொடர்ந்து முதல்வர் கலந்து கொண்ட விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் பெயர் இடம் பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே நடைபெற்ற வாக்குவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவிற்கான அழைப்பிதழில் துணை முதல்வர் ஓபிஎஸ் பெயர் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் ”அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இடம் பெறாததில் எந்த உள்நோக்கமும் இல்லை. கட்சி செயல்பாடுகள், மாநில அளவிலான நிகழ்வுகளில் இருவரது பெயருமே அழைப்பிதழில் இடம்பெறும். இது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நிகழ்ச்சி என்பதால் அவரது பெயர் இடம்பெறவில்லை” என்று கூறியுள்ளார்.