புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 1 நவம்பர் 2020 (06:35 IST)

அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் காலமானார்:

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 72
 
கடந்த மாதம் அமைச்சர் துரைக்கண்ணு காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது
 
இதனை அடுத்து கொரோனா வைரஸ்க்கும் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் சிகிச்சை பலனின்றி காலமானார் 
 
இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் பெருமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்கள் என்பதும் அதன் பின்னர் அவரது உடல் கொரோனா விதிப்படி அடக்கம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது