செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2018 (19:18 IST)

அமைச்சரின் ஓட்டுநர் மர்ம மரணம்: போலீசில் ஓட்டுநர் மனைவி புகார்

ஓ.எஸ்.மணியனின் கார் ஓட்டுநர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி போலீசில் தெரிவித்துள்ளனர்.
 
சென்னை சூளைமேடு பகுதியில் வசிப்பவர் சவுந்தர்ராஜன். இவர் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வீட்டில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இன்று அவர் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்படதாகவும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, அவரது உடலில் ரத்தக் காயங்கள் இருந்துள்ளது.
 
இதைக்கண்ட அவரது உறவினர்கள் அதிரிச்சியடைந்தனர். இந்நிலையில் சவுந்தர்ராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரது மறைவில் மர்மம் உள்ளதாக அவரது மனைவி ரேவதி சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.