வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 2 மே 2019 (08:08 IST)

மெட்ரோ ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்: பயணிகள் நிம்மதி

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் மெட்ரோ ரயில் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
 
மெட்ரோ ரயில் ஊழியர்கள் எட்டு பேர் சங்கம் அமைக்க முயற்சி செய்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் இணைத்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மெட்ரோ ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்தனர்.
 
இதனையடுத்து நேற்று முன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் மெட்ரோ ஊழியர்கள், தொழிலாளர் நலத்துறை, மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் மெட்ரோ ஊழியர்களுக்கும் மெட்ரோ நிர்வாகத்திற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது. எனவே மெட்ரோ பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.