புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 1 மே 2019 (19:46 IST)

மெட்ரோ ரயிலை திட்டமிட்டு நிறுத்திய 3 பேர் கைது – வலுக்கும் ஊழியர் போராட்டம் !

மெட்ரோ ரயில்நிலைய சிக்னல்களை தவறாகப் பயன்படுத்தி ரயில் சேவையை முடக்கியதாக 3 ஊழியர்களை மெட்ரோ நிர்வாகம் கைது செய்துள்ளது.

மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்களில் எட்டு பேர், நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் சங்கம் ஆரம்பித்ததாக குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 8 பேர் சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்த்து மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் அனைவரும் உள்ளிருப்பு போராட்டம் செய்ததால் மெட்ரோ ரயில் நிலையங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அனுபவம் இல்லாதவர்களைக் கொண்டு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி மெட்ரோ ரயில்களை இயக்கும் பணிகளை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஊழியர்கள் இறங்கிவிட்டனர். இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதையடுத்து மெட்ரோ நிர்வாகம் தற்காலிக ஊழியர்களைக் கொண்டு மெட்ரோ சேவையைத் தொடங்கியுள்ளது.

அதையடுத்து இப்போது மெட்ரோ தங்கள் ஊழியர்கள் மூன்று பேர் போக்குவரத்து சிக்னல்களை தவறாகப் பயன்படுத்தி மெட்ரோ சேவையை முடக்கியதை அடுத்து அவர்களை பணியிடை நீக்கம் செய்கிறோம் என அறிவித்துள்ளது.

இதனால் மெட்ரோ நிர்வாகத்துக்கும் ஊழியர்களுக்குமிடையிலான போராட்டம் மேலும் வலுத்து வருகிறது.