தமிழகத்தில் இன்று 7 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி தகவல்..!
தமிழகத்தில் இன்று 7 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, தற்போது தமிழகத்தை நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகத்தில் மாறுபாடு காணப்படுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை, தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட்டிற்கும் மேல் ஆகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று மழையை எதிர்பார்த்தாலும், வெப்பநிலையும் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் தங்களது ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
Edited by Siva