திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2019 (13:19 IST)

மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெடி குண்டு மிரட்டல்; பக்தர்கள் பதற்றம்

மீனாட்சியம்மன் கோவிலுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து தற்போது பாதுகாப்பு அதிகரித்துள்ளது.

வரலாற்று பிரசித்திபெற்ற மீனாட்சியம்மன் கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இன்று மர்ம நபர்களால் மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதனை தொடர்ந்து மீனாட்சியம்மன் கோவிலின் உள்பகுதிகளிலும், நுழைவு வாயில்களிலும், வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 360 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.