பேயாக வந்து மிரட்டும் தாய்..! அலறி ஓடிய இளம்பெண்! – மணப்பாறையில் பீதி!
மணப்பாறையில் இளம்பெண்ணை இறந்த தாய் மிரட்டுவதாக அவர் செய்த களேபரம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி என உலகம் ஒரு பெரும் அடியை முன்னோக்கி வைத்தாலும் பேய் குறித்த பயம், பீதி இன்னும் மக்களுக்கு குறையாமல் இல்லை. படித்தவர்கள் முதல் சாமானியர்கள் வரை பேய் குறித்து இருக்கும் பயத்தை காட்டியுள்ளது மணப்பாறை சம்பவம்.
மணப்பாறையில் இளம்பெண் ஒருவர் சமீபத்தில் தனது கல்லூரி பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவரது தாய் சில காலம் முன்னதாக காலமாகிவிட்டார். ஆனால் அவரது தாயின் உருவம் வீட்டிற்குள் தெரிவதாகவும், அடிக்கடி பாத்திரங்கள் உருளுவதாகவும் அவர் பீதியில் இருந்துள்ளார். சமீபத்தில் நள்ளிரவில் தாயின் பேய் வீட்டிற்குள் களேபரம் செய்வதாக அலறி அடித்து ஓடிய இளம்பெண்ணும் அவரது தோழியும் வீட்டிற்கு வெளியே மயங்கி கிடந்துள்ளனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் அப்பகுதியில் மக்களிடையே பீதி எழுந்துள்ளது.