வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (11:48 IST)

புதுச்சேரியில் நடக்கும் பிரான்ஸ் அதிபர் தேர்தல்! – 4 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி!

french election
பிரான்ஸில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில் அதற்கான தேர்தல் புதுச்சேரியிலும் நடைபெறுகிறது.

பிரான்ஸ் அதிபராக இருந்த இமானுவேல் மக்ரோனின் ஆட்சிக்காலம் முடிவடைந்த நிலையில் பிரான்சில் அதிபர் தேர்தல் தொடங்கியுள்ளது. முதல் சுற்று தேர்தல் ஏப்ரல் 10ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 24ம் தேதியும் நடைபெறுகிறது.

இன்று பிரான்சில் தேர்தல் மும்முரமாக நடந்து வருகிறது. பிரான்சின் குடியுரிமை பெற்ற பலர் புதுச்சேரியில் வசித்து வருவதால் புதுச்சேரியிலும் பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சென்னை, புதுச்சேரி, ஏனாம் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த 4,600 பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிக்க உள்ளனர்.