திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 22 நவம்பர் 2023 (14:32 IST)

பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபர் கைது...வாகனம் பறிமுதல்!

thangapandiyan
சமீபத்தில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில்  பைக் வீலிங் செய்தாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து,  திருச்சி சமயபுரத்தில் பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்து, பைக் சாகசத்தில் ஈடுபட்ட சம்பவத்தில்  மொத்தம் 13  பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களில் 7 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் வீலிங் செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் இளைஞர்கள் மீது புகாரளிக்க இலவச எண் அறிவிக்கப்பட்ட நிலையில், கரூர் – திருச்சி சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட தங்க பாண்டியனை போலீஸார் கைது செய்தனர்.

கரூர்- திருச்சி  நெடுஞ்சாலையில் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து பகிர்ந்த திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர் ஓட்டிய இரு சக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.