இதைதான் கருணாநிதி அன்றே சொன்னார்! திமுக – காங் குறித்து அமைச்சர் பாண்டியராஜன்!
திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையே சிறு வாதம் எழுந்த நிலையில் அதுகுறித்து அதிமுக அமைச்சர் பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக கூட்டணி குறித்து வெளியிட்ட அறிக்கையால் திமுக- காங்கிரஸ் இடையே சிறு விவாதம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து நேற்று கே.எஸ்.அழகிரியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.
ஆனால் திமுக – காங்கிரஸ் கூட்டணி என்பது உடைந்த கண்ணாடி போன்றது என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் மற்றொரு அதிமுக அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் இதுகுறித்து பேசிய போது ”கூடா நட்பு கேடாய் முடியும் என திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து கருணாநிதி அப்போதே கூறியுள்ளார். சுயமரியாதையுடன் திமுகவோடு கூட்டணியில் இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை காங்கிரஸ்தான் முடிவு செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.