ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 ஜனவரி 2020 (09:43 IST)

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வர் தொடங்கி வைத்தார்!

தமிழகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்தியா முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடைபெறுகிறது. 90களில் குழந்தை வளர்ச்சியில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது போலியோ நோய். 1995 முதல் இந்தியா முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேசிய அளவிலான போலியோ சொட்டு மருந்து வழங்கும் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் குழந்தகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலமாக வார்டு வாரியாக சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், கோயில்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.