டெலிவரிக்காக அட்மிட்டான பெண்ணை கர்ப்பமாக இல்லை என திருப்பி அனுப்பிய அரசு மருத்துவமனை
பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு சென்ற பெண்ணை நீங்கள் கர்ப்பமாக இல்லை என மதுரை அரசு மருத்துவமனை திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வீரகனூர் கோழிமேடு பகுதியில் வசித்து வரும் யாஸ்மின் என்ற பெண் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது அவர் கர்ப்பமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து யாஸ்மின் மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்துள்ளார். அதில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் 9 மாதங்கள் முடிவடைந்து அவர் பிரவசத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் யாஸ்மின் கர்ப்பமே இல்லை என்று மகப்பேறு பிரிவில் கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த யாஸ்மினுக்கு மருத்துவர்கள் சரியான விளக்கம் ஏதும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து யாஸ்மின் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கர்ப்பிணிக்கு போன்று சிகிச்சை அளித்த ராஜாஜி மருத்துவமனை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உடல் உபாதைகளுக்கு ஆளான யாஸ்மினுக்கு தகுந்த இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக எந்த ஒரு தகவலும் இதுவரை சரியாக கிடைக்கவில்லை.