ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 14 நவம்பர் 2018 (11:50 IST)

செல்போனுக்கெல்லாம் சார்ஜ் போட்டுட்டு ரெடியா இருங்க; கஜா நியூ அப்டேட்

கஜா புயல் வரவிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கையாக இருங்கள் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
 
கஜா புயல் நெருங்கி வருவதால் அதன் தாக்கம் இன்னும் 24 மணி நேரத்தில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் அதன் பாதை, கடலூர் - பாம்பன் பாலம் இடையே இருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
தென்மேற்கு திசையில் நகர்ந்து வரும் புயல் நவம்பர் 15 ஆம் தேதி அன்று பிற்பகலில் பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
 
இதுகுறித்து பேசிய சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் புயலின் காரணமாக மின்வெட்டு ஏற்படலாம். ஆகவே மக்கள் தங்களின் செல்போனுக்கு சார்ஜ் போட்டுக்கொள்ளுங்கள். கூரை வீட்டில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மக்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.