ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 12 நவம்பர் 2018 (17:18 IST)

ரூட் மாறும் கஜா புயல்?

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி சென்னை - நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கவுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால், இதில் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
கஜா புயல் நவம்பர் 15 ஆம் தேதி முற்பகல் நாகை - சென்னை இடையே கரையை கடக்கும். இதனால் நவம்பர் 14 ஆம் தேதி இரவு முதல் புயல் கரையைக் கடக்கும் வரையில் தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. 
 
ஆனால், புயல் சென்னை - நாகப்பட்டினம் வழியே கடக்கும் என கூறப்பட்ட நிலையில் இதில் சில திருத்தமாக புயல் கடலூர் பாம்பன் இடையே கரையை கடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், சென்னையில் மழை இருக்கும், ஆனால் புயலின் பாதிப்பு இருக்காது. காற்றின் வேகம் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.