தமிழகத்திற்கு தடுப்பூசியை பெற்று தருவது பாஜகவின் கடமை: அமைச்சர் மா சுப்பிரமணியன்
தமிழகத்திற்கு தடுப்பூசியை பெற்று தருவது பாஜகவின் கடமை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு மத்திய அரசு சரியான அளவில் தடுப்பூசியை ஒதுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தமிழகத்தின் மக்கள் தொகை கணக்கின்படி 10 சதவீதம் மட்டுமே தடுப்பூசியை மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும், குஜராத் உள்ளிட்ட ஒருசில பாஜக ஆளும் மாநிலங்களில் 20 சதவீதத்துக்கு மேல் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்திற்கு தடுப்பூசி பெற்றுத் தரவேண்டியது பாஜகவின் கடமை என்று சற்றுமுன் அளித்த பேட்டியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். மத்திய அரசிடமிருந்து தடுப்பூசியை பெற்றுத்தரும் பணியை தமிழக பாஜக தலைவர் எல் முருகன் செய்ய வேண்டும் என்றும் இது தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் பெற்று தருவது அவருடைய கடமை என்றும் தெரிவித்துள்ளார்.