உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை தமிழக அரசு மீட்கவில்லை: எல் முருகன்
உக்ரைனில் இருக்கும் தமிழக மாணவர்களை தமிழக அரசு மீட்டு கொண்டு வந்ததாக கூறப்படுவது தவறான தகவல் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தான் தமிழக மாணவர்கள் உள்பட இந்திய மாணவர்கள் அனைவரையும் மீட்டு கொண்டு வந்தனர் என்றும் எல் முருகன் கூறியுள்ளார்
உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது சொந்த செலவில் தனி விமானம் மூலம் அழைத்து வந்துள்ளது
எனவே தமிழக அரசு உக்ரைனில் உள்ள சிக்கி இருக்கும் மாணவர்களை மீட்க செலவை ஏற்றுக்கொண்டுள்ளது என்ற தகவல் உண்மை இல்லை என்றும் மத்திய அமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார்