ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பூவுக்கு தடபுடல் வரவேற்பு!
ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் திருமதி குஷ்பு சுந்தர் வாக்கு சேகரிப்பு.
ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் திருமதி குஷ்பு சுந்தர் தாமரை சின்னத்திற்கு தொகுதிக்குட்பட்ட கோடம்பாக்கம் பகுதியில் உள்ள டிரஸ்ட் புரதில் திறந்த வேனில் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிக்க வந்த இவரை மலர் தூவி மாலை சூடி மேளதாளத்துடன் பகுதி மக்கள் வரவேற்றனர்.
தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பின் போது பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கூட்டணி கட்சியான அதிமுக மற்றும் பாமக கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.