வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By
Last Updated : செவ்வாய், 30 மார்ச் 2021 (09:09 IST)

வாக்குச்சாவடி விதிகளை மீறிய ஆசிரியை… வேட்பாளர் புகாரை அடுத்து சஸ்பெண்ட்!

தபால் வாக்கு அளித்த விவரத்தை முகநூலில் வெளியிட்ட ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் சரகம் சுரண்டையில் ஆர்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிபவர் சகாய ஆரோக்கிய அனுஷ்டாள். இவருக்கு தேர்தல் நாளன்று வாக்குச் சாவடியில் பணி ஒதுக்கப்பட்டுள்ளதால், தபால் வாக்கு மூலம் வாக்கு செலுத்தினார். ஆனால் தான் வாக்கு செலுத்தியதை முகநூலில் புகைப்படத்துடன் வெளியிட்டதால் இப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இவரின் புகைப்படத்தோடு கூடிய புகாரை அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனி என்பவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வாக்குச் சாவடி ரகசியங்களை காக்காமல் போனதற்காக அனுஷ்டாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.