புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 24 அக்டோபர் 2022 (16:42 IST)

கோயம்பேடு சந்தைக்கு நாளை விடுமுறை: வியாபாரிகள் அறிவிப்பு!

Koyambedu
தீபாவளியை முன்னிட்டு கோயம்பேடு சந்தைக்கு நாளை விடுமுறை என வியாபாரிகள் சங்க தலைவர் அறிவித்துள்ளார்.
 
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் லாரி டிரைவர்கள்  சொந்த ஊருக்கு தீபாவளி கொண்டாட சென்றதன் காரணமாக நாளை கோயம்பேடு சந்தையில் எந்த பணிகளும் நடைபெறாது என்றும் கோயம்பேடு அவர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து மேலும் கூறிய கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரன் அவர்கள் கோயம்பேடு சந்தைக்கு நாளை வியாபாரிகள் யாரும் வரவேண்டாம் என்றும் நாளை மறுநாள் முதல் வழக்கம் போல் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva