புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2019 (08:13 IST)

2 குழந்தைகளை கொன்ற மனோகரனின் தூக்கு தண்டனை: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கோவையில் 2 பள்ளி குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கில் மனோகரனுக்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
 
மனோகரனுக்கு வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் சென்னை ஐகோர்ட் இந்த தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. ஆளுநரிடம் கருணை மனு அளிக்க அவகாசம் கோரி மனோகரன் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், இதுகுறித்து தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது
 
கடந்த 2010-ம் ஆண்டு கோவையில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் வேலை பார்த்த மோகன கிருஷ்ணன் என்ற கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் மனோகரன் ஆகிய இருவரும் 2 குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலையும் செய்தனர்,
 
இதில் மோகன கிருஷ்ணன் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் மனோகரன் மீது மட்டும் வழக்கு நடந்தது. மனோகரனுக்கு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு தூக்குத் தண்டனை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது