செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 ஜூன் 2023 (14:59 IST)

திருவாரூரில் இருந்தபடி நடவடிக்கை எடுக்கிறார்: முதல்வர் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பேட்டி..!

kkssr
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் திருவாரூரில் இருந்து கொண்டே மழை குறித்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை கூறி வருகிறார் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்  ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறியதாவது
 
கனமழையால் சென்னையில் 6 மரங்கள், 38 கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூரில் இருந்தபடி அதிகாரிகளிடம் பணிகளை கேட்டறிந்து வருகிறார்.
 
சென்னையின் 22 சுரங்கப் பாதைகளில் ஒரு சுரங்கப் பாதையில் மட்டும் தான் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கனமழை காரணமாக சென்னையில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. பருவமழை மட்டுமின்றி இதுபோன்று திடீரென பெய்யும் மழையை எதிர்கொள்ளவும் தயார் நிலையில் அரசு உள்ளது.’ என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்  ராமச்சந்திரன் கூறினார்.
 
Edited by Mahendran