1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Raina compared Ruthuraj with MS Dhoni

ருத்துராஜ் தோனியை நியாபகப்படுத்துகிறார்… சூசகமாக சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக்க சொன்ன ரெய்னா!

ருத்துராஜ்
தோனி, இன்னும் எத்தனை சீசன் ஐபிஎல் விளையாடுவார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இப்போது அவருக்கு வயது 41 ஆகின்றது. அதுமட்டுமில்லாமல் அவர் முழங்கால் வலிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

இதனால் சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜை தோனியோடு ஒப்பிட்டு சுரேஷ் ரெய்னா பேசியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

ருத்துராஜ்  பற்றி “அவர் தோனியை போன்ற நிதானமும் பொறுமையும் வாய்க்க பெற்றவர். அவர் போட்டியை நிதானமாக அனுகி, தான் அழுத்தத்தில் இருப்பதையே காட்டிக் கொள்ளாதவர். தற்போது நடக்கும் MPL லீக் போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.” எனக் கூறியுள்ளார் ரெய்னா. அதனால் சூசகமாக சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக ருத்துராஜை பரிந்துரை செய்கிறார் ரெய்னா என்ற கருத்தும் எழுந்துள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் இந்திய அணி நரகத்திற்கு போகட்டும்: மியாண்டட்