வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 7 நவம்பர் 2019 (12:46 IST)

புருஷனை காரோடு கொளுத்திய மனைவி:உல்லாச இம்சையால் விபரீதம்

கரூர் மாவட்டத்தில் கணவனை காரோடு எரித்து கொன்ற மனைவி மற்றும் மகனை போலீஸார் கைது செய்துள்ளனர். 
 
கரூர் அருகே பரத்தி எனும் பகுதியில் சாலையின் ஓரம் எரிந்த நிலையில் நின்றுக்கொண்டிருந்த காரில் முற்றிலும் எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இது குறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், காருடன் எரித்து கொல்லப்பட்டது நொய்யலை சேர்ந்த தொழிலதிபர் ரங்கசாமி என்பது தெரியவந்தது. 
 
ரங்கசாமியின் மரணம் குறித்து விசாரித்த போது, ரங்கசாமிக்கு வேறு ஒரு பெண்ணிடன் தகாத உறவு இருந்து வந்ததும். இதனால் அவர் தன் மனைவியை துன்புறுத்தி வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவரது மனைவி கவிதாவிடம் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆம், கவிதா தனது மகன் அஸ்வின் குமாருடன் இணைந்த் ரங்கசாமியை கழுத்தை நெறித்து கொன்று காருக்குள் போட்டுவிட்டு பரமத்தி அருகே காரை நிறுத்தி தீ வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் தாயையும் மகனையும் கைது செய்துள்ளனர்.