அதிமுகவினர் ஒவ்வொருவரின் ரத்தத்திலும் சசிகலா: கருணாஸ் பேட்டி!

Sugapriya Prakash|
அதிமுகவினர் ஒவ்வொருவரின் ரத்தத்தில் உள்ள உயிரணுக்களிலும் சசிகலா கலந்துள்ளார் என கருணாஸ் பேட்டி. 
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், டிடிவி தினகரனின் உறவினருமான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது பெங்களூர் அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இருப்பினும் அவரது பெயர் தமிழக அரசியலில் பேசு பொருளாக உள்ளது. 
 
அந்த வகையில், 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக அறிவித்துள்ளது. இந்நிலையில் கருணாஸ் சமீபத்திய பேட்டியில், அதிமுகவினர் ஒவ்வொருவரின் ரத்தத்தில் உள்ள உயிரணுக்களிலும் சசிகலா கலந்துள்ளார்.

ஜெயலலிதாவின் அனைத்து நடவடிக்கைகளிலும் சசிகலா உள்ளார். பிரதமரின் ஆசையை நிறைவேறவிடாமல், தான் நினைத்த ஒருவரை சசிகலா முதல்வராக்கினார் என பேசினார். 
இதற்கு முன்னரும் சசிகலாவுக்கு எப்போதும் ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருப்பதாக அவர் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :