அதிமுகவின் 49 ஆவது ஆண்டு தொடக்க விழா – தொண்டர்கள் மகிழ்ச்சி!

Last Updated: சனி, 17 அக்டோபர் 2020 (10:13 IST)

அதிமுக கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று 49 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது.

திமுகவில் பொருளாளராக இருந்த எம்ஜிஆருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே எழுந்த அரசியல் பிரச்சனைகளால் அந்த கட்சியில் இருந்து பிரிந்து வந்து எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை 1972 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பெற்றார். அதிலிருந்து தொடர்ந்து 10 ஆண்டுகள் அவர் ஆட்சியில் இருந்தார். பின்னர் அவர்
மறைவிற்குப் பின்னரே ஆட்சி திமுக வசம் சென்றது.

இதையடுத்து கட்சிக்கு ஜெயலலிதா தலைமையேற்று பின்னர் ஆட்சியில் அமர்ந்தார். சுதந்திரத்துக்கு பிறகு தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியாக அதிமுக உள்ளது. இந்நிலையில் அந்த கட்சி இன்று தனது 49 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி அக்கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சியாக அதைக் கொண்டாடி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :