1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 28 ஜூலை 2018 (15:43 IST)

இன்னும் 2 நாட்கள் மருத்துவமனையில் கருணாநிதி.....

வயது முதிர்வு மற்றும் உடல் நிலைக்கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நிலையில் கடந்த சில நாட்களாக நலிவு ஏற்பட்டுள்ளது.  கடந்த 2 நாட்களாக கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.  

 
நேற்று நள்ளிரவு அவரின் உடல்நிலை மோசமானது. எனவே மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 
 
பல்வேறு கட்சித் தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்து வருகிறார்கள்.
 
இந்நிலையில், சிறிது நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், ரத்த அழுத்தம் குறைவாக இருந்ததால் நேற்று இரவு கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்ததில் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது இரத்த அழுத்தம் சீராகி விட்டது. இன்னும் 2 நாட்களுக்கு அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் மருத்துவமனையிலேயே இருப்பார்” என அவர் தெரிவித்தார்.