1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 23 ஆகஸ்ட் 2023 (12:39 IST)

அதிமுக வலிமையான கட்சி என்பதை மதுரை மாநாடு நிரூபித்துள்ளது: கார்த்தி சிதம்பரம் எம்பி

அதிமுக வலிமையான கட்சி என மதுரை மாநாடு நிருபித்துள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் அக்கட்சி கூட்டணி சேர்ந்துள்ள இடம் சரியற்றது என்பதால் தேர்தலில்  வெற்றி பெற முடியாது என்றும் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். 
 
இன்று இராமநாதபுரத்தில் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக வலிமையான கட்சி என்பதை மதுரை மாநாடு நிரூபித்துள்ளது, ஆனால் கூட்டணி சேர்ந்துள்ள இடம் தான் சரி ஏற்றது என்று தெரிவித்தார். மேலும் அதிமுக பாஜக கூட்டணியால் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்றும் அவர் கூறினார். 
 
நீட் தேர்வில் ஒரு வருடம் காத்திருந்து பயிற்சி பெற்ற மாணவர்களே வெற்றி பெறுகிறார்கள் என்றும் ஆகையால் தமிழகத்தில் நீர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran