வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (20:44 IST)

முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்து வணங்கியதில் எந்த தவறுமில்லை- அண்ணாமலை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துவிட்டு, சமீபத்தில் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டார். வட இந்தியாவில் ஆன்மிக பயணம் மேற்கொண்டு  நேற்று சென்னை திரும்பினார்.

நேற்று முன் தினம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்தபோது, அவர் காலில் விழுந்தார்.

இது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து  பலரும் கருத்துகள் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘’உத்தரபிரதேச  முதல்வர் யோகி ஆதித்ய நாத் காலில் ரஜினிகாந்த் விழுந்து வணங்கியதில் எந்த தவறுமில்லை. யோகி ஆட்சி தமிழ் நாட்டில் அமைந்திருந்தால் நல்லாட்சியாக இருந்திருக்கும். வேலையில்லாத அரசியல் கட்சிகள் ரஜினி பற்றி தேவையில்லாத கருத்துகள் கூறி வருகின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

‘’வயது குறைவானவராக இருந்தாலும் சந்நியாசி காலில் விழுவது என் பழக்கம்’’ என்று ரஜினி கூறியது குறிப்பிடத்தக்கது.