திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (09:19 IST)

பார்முலா 4 கார் பந்தயத்தால் உலக அளவில் அறியப்படும் சென்னை மாநகரம் : கார்த்தி சிதம்பரம்

Karthi Chidambaram
ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் சென்னை நகரம் உலக அளவில் அறியப்படும் என்று காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சமீபத்தில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடந்த நிலையில் இந்த பந்தயம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் கார்த்தி சிதம்பரம் கூறிய போது ’தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடு பெறுவது தேவையான ஒன்று என்றும் அதை நான் வரவேற்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் பல வகையான வேலை வாய்ப்பு இதனால் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

ஃபார்முலா 4 கார்ப்பந்தயம் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்த போது இந்த கார் பந்தயத்தால் சென்னை மாநகரம் உலக அளவில் அறியப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் கூவம் நதியை சுத்தப்படுத்த பல கோடி ரூபாய் செலவு செய்ததாக சென்னை மேயர் கூறி இருக்கிறார். அதற்கு நான் முழுமையான வெள்ளை அறிக்கையை கேட்டு இருக்கிறேன். மேலும் குறிப்பிட்ட தொகை செலவிட்டும் ஆறு ஏன் தூய்மை அடையவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்தி திணிப்பை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

Edited by Siva