புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 நவம்பர் 2019 (10:31 IST)

அரிசிராஜாவை பிடிக்க வந்த கபில்தேவ்! பரபரப்பில் ஆண்டியூர்!

வனத்துறையிடம் சிக்காமல் தண்ணி காட்டி வரும் அரிசிராஜாவை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

ஆனைமலை பகுதியில் உள்ள கிராமங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது காட்டுயானை அரிசிராஜா. கடந்த 3 மாத காலமாக ஆனைமலை, அர்த்தநாரிப்பாளையம், ஆண்டியூர் பகுதிகளில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ள அரிசிராஜா இருவரை கொன்றுள்ளது.

அரிசிராஜாவை பிடிக்க கோரி மக்கள் வனத்துறையினரிடன் கோரிக்கை விடுத்ததால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அரிசிராஜாவை பிடிக்க பல இடங்களில் அதற்கு பிடித்த ரேசன் அரிசிகள் வைக்கப்பட்டன. ஆனால் அரிசிராஜா வரவில்லை. பிறகு பாரி என்ற கும்கி யானையை கொண்டு வந்து அரிசிராஜாவை பிடிக்கும் பணி தொடங்கியது. ஆனால் பாரிக்கு மதம் பிடித்ததால் திரும்ப முகாம்க்கு அனுப்பப்பட்டது.

ஆண்டியூர் பகுதியில் அரிசிராஜாவை கண்டதாக மக்கள் சிலர் தெரிவித்ததையடுத்து அங்கு தேடுதல் வேட்டை தொடங்கியது. ஆனால் அதற்குள் ஆண்டியூர் காட்டுப்பகுதியில் காட்டுராஜா பதுங்கிவிட்டது. இந்நிலையில் பாரிக்கு பதிலாகா அரிசிராஜாவை பிடிக்க கும்கி யானை கபில்தேவ் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்த முறை அரிசிராஜாவை கண்டிப்பாக பிடித்துவிடுவோம் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.