திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 நவம்பர் 2019 (09:35 IST)

நீலகிரியில் வாகனத்தை துரத்திய புலி: டாப் கியரில் எஸ்கேப்!

நீலகிரியில் சுற்றுலா பயணிகள் வாகனத்தை புலி ஒன்று துரத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் சரணாலயத்தில் யானை, புலி, சிறுத்தை என காட்டு விலங்குகள் பல வாழ்ந்து வருகின்றன. வன விலங்குகளை காண சுற்றுலா பயணிகள் ரோந்து வாகனங்கள் மூலம் காட்டுக்குள் செல்வது வழக்கம்.

அதுபோல ரோந்து வாகனம் ஒன்றில் சென்ற பயணிகள் மரத்தினடியில் படுத்திருந்த புலியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். திடீரென அந்த புலி ரோந்து வாகனத்தை நோக்கி வேகமாக வர தொடங்கியுள்ளது. இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ரோந்து வாகனத்தை கிளப்பியுள்ளனர். வாகனத்தின் பின்னே சிறிது தூரம் துரத்தி வந்த புலி பிறகு பின்வாங்கியுள்ளது.

சுற்றுலா பயணிகளை தாக்க புலி துரத்தி வந்த சம்பவம் முதுமலை சரணாலயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.