புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (08:26 IST)

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் உள்ள எம்பிக்கள் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் என கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றுடன் 32 ஆக உயர்ந்தது என்பதை பார்த்தோம். தினமும் சராசரியாக இரண்டு எம்எல்ஏக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது
 
இந்த நிலையில் இன்று ஒரு தமிழக எம்பிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பியும் பிரபல தொழிலதிபருமான வசந்த குமார் அவர்களுக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 
 
ஏற்கனவே எம்பிக்கள் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் என பலரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு எம்பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.