புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஜூலை 2020 (15:13 IST)

புதிய கல்வி கொள்கைக்கு 6% நிதி வரவேற்கதக்கது.. ஆனால்..? – கமல்ஹாசன் ட்வீட்

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் உருவாகியுள்ள நிலையில் கமல்ஹாசன் இதுகுறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கை குறித்த விவரங்கள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், அதற்கு ஆதரவாக பலர் பேசி வருகின்றனர். அதேசமயம் அதனால் பாதிப்புகள் ஏற்படும் என சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.

இந்த புதிய கல்விக் கொள்கைக்காக நாட்டின் மொத்த ஜிடிபி மதிப்பில் 6 சதவீதம் ஒதுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “புதிய கல்விக் கொள்கையில், நாட்டின் GDP-இல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது. அதே போல் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையையும் தயார்படுத்த வேண்டும். மருத்துவத்துறை வழக்கமான 1 சதவிகிதத்தில் இருந்து உயர்ந்து 7-8% பங்கினை பெறுவது தேசத்தின் நலனுக்கு இன்றியமையாதது.” என்று தெரிவித்துள்ளார்.