வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2020 (08:38 IST)

தவறு அரைகுறையான ஆடைகளிலா? காமம் பிடித்த கண்களிலா? – கமல்ஹாசன் கேள்வி!

இந்தியாவில் நடக்கும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு அவர்களது ஆடை கலாச்சாரத்தை குற்றம் சாட்டுவது குறித்து கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ள கமல் தமிழகம் முழுவதும் பயணித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த மநீம மகளிரணி கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

அதில் பேசிய அவர் “இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வன்முறைகளின்போது அவர்களது ஆடை கலாச்சாரத்தின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. கடவுள் கூடதான் அறைகுறையாக ஆடை அணிகிறார். சில கடவுள்கள் ஆடையே அணிவதில்லை. அதை பார்க்கும்போது தோன்றாத பாலியல் வன்முறை எண்ணம் எனது சகோதரிகளை பார்க்கும்போது மட்டும் தோன்றுவது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.