1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (16:09 IST)

"இன்று போல என்றும் வாழ்க" என்று வாழ்த்த முடியாது: கமல்ஹாசன்

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று காலை முதல் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு பல்வேறு கட்சியின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் சந்திரபாபுநாயுடுவின் கோரிக்கை நிறைவேற வாழ்த்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், அதே நேரத்தில் இன்றுபோல் என்றும் வாழ்க என கூறமுடியாது என்று தனது டுவிட்டரில் கூறியுள்ளார். கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியதாவது:
 
உங்கள் பிறந்த நாளன்று , உங்கள் மாநிலத்தின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருக்கிறீர்கள் ... வழக்கம் போல "இன்று போல என்றும் வாழ்க" என வாழ்த்துவது முறையாகாது. எனினும் நாட்டிற்கு உங்கள் மாநிலம் அளித்த முதலீட்டில், உரிய பங்கைத் திரும்பக் கேட்கும் உங்கள் போராட்டம் வெல்லட்டும்' என்று கமல் கூறியுள்ளார்.