செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (13:05 IST)

தலைப்பு செய்தியாய் மாறிய ரஜினி - கமல்: தேர்தலுக்கு பரஸ்பரம் ஆதரவா??

தமிழக சட்டமன்றதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாய் ஈடுபட்டு வருகின்றன. பல கட்சிகள் தங்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் பிரச்சாரம், சர்வே என பிஸியாக உள்ளன. 
 
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகளுக்கு போட்டியாக கமல்ஹாசனும் அவரது மக்கள் நீதி மய்யம் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
 
நேற்று ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் இன்று கமல் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக அனைவரிடமும் ஆதரவு கேட்கும் போது நண்பர் ரஜினியிடம் மட்டும் ஆதரவு கேட்காமல் இருப்பேனா? நிச்சயம் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என பேட்டியளித்துள்ளார். 
 
இன்னும் அரசியல் கட்சி துவங்குவது, தேர்தலில் போட்டியிடுவது குறித்து சரியான முடிவெடுக்காமல் உள்ள ரஜினிகாந்த், கமலுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.