திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2019 (08:24 IST)

இன்று முதல் தனி மாவட்டமாகிறது கள்ளக்குறிச்சி..

தமிழகத்தின் 34 ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று முதல் தொடக்கம்.

தமிழகத்தில் செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக உதயமாகின்றன.  இதில் முன்னதாக விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்டிருந்த கள்ளக்குறிச்சி இன்று முதல் தனி மாவட்டமாகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிர்வாக பணிகளை இன்று முதல்வர் எடப்பாடி தொடங்கிவைக்கிறார். மேலும் அந்த விழாவில் அரசின் நலத்திட்டங்களையும் மக்களுக்கு வழங்குகிறார்.

முன்னதாக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி சமீபத்தில் தனி மாவட்டமாக உதயமானது கூடுதல் தகவல். மேலும் கள்ளக்குறிச்சி தமிழகத்தில் 34 ஆவது மாவட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.