வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (15:35 IST)

அணை பாதுகாப்பு மசோதா தள்ளிவைப்பு..

அணை பாதுகாப்பு மசோதாவை தள்ளிப்போட மத்திய அரசு ஒப்புதழ் வழங்கியுள்ளது.

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது எனவும், பாதுகாப்பு என்ற பெயரில் மத்திய அரசு அணைகளை கைப்பற்றி வருகிறது எனவும் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அணை பாதுகாப்பு மசோதாவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி வந்தார்.

இதனை தொடர்ந்து மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல, அதனை திரும்ப பெற வேண்டும் என முதல்வர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அணை பாதுகாப்பு மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி ஜலசக்தி துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.