புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 27 பிப்ரவரி 2020 (16:17 IST)

1 % கூட முன்னேறாத க.அன்பழகனின் உடல்நிலை: வேதனையில் திமுகவினர்!!

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் உடல்நிலை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 
 
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவர்கள் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. மருத்துவமனையில் இத்தனை நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையிலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என தெரிகிறது. 
 
இந்த செய்தி திமுக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு திமுக தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்படும் என தெரிகிறது.