செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (11:00 IST)

விரைவில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000! – அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின்போது திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில் முக்கியமான ஒன்று இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம். திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் முதற்கட்டமாகவே இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் கே.என்.நேரு “திமுக அளித்த வாக்குறுதிப்படி இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும். இதுகுறித்து முறைப்படி மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார்” என கூறியுள்ளார்.