வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 4 ஜூலை 2020 (13:00 IST)

இப்போ ஸ்டாலினும் உதயநிதியும் வாய் திறப்பாங்களா? #JusticeForSasikala

திமுகவை விமர்சித்து #JusticeForSasikala என்ற ஹேஷ்டேக் சமூகவலைத்தளங்களில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த நைனார் குப்பத்தில் கடந்த 24 ஆம் தேதி சசிகலா என்ற பெண் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்யூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பெயரில் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அன்றே உடல் அடக்கம் செய்யப்பட்டது.  
 
இந்த சம்பவம் நடந்த மறுநாள் சசிகலா தற்கொலையில் மர்மம் இருப்பதாக அவரது அண்ணன் போலீஸில் புகார் அளித்தார். அந்த பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருசோத்தமன் என் தங்கையை கொலை செய்துவிட்டு நடகமாடுவதாக குற்றம்சாட்டினார்.  
 
குற்றம்சாட்டப்பட்ட இருவரும் சசிகலா குளிக்கும் போது வீடியோ எடுத்து, அதனை வைத்து மிரட்டி சசிகலாவை தற்கொலைக்கு தூண்டியுள்ளார்கள் என கூறி, மீண்டும் தனது தங்கையின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என சுடுகாட்டில் காத்துக்கொண்டிருக்கிறார்.  
 
இந்த சம்பவத்தில் திமுகவின் பெயர் அடிப்பட்டுள்ளதால் தலைமை ஏதேனும் நடவடிக்கை எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், திமுகவை விமர்சித்து #JusticeForSasikala என்ற ஹேஷ்டேக் சமூகவலைத்தளங்களில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
பெண்களுக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டி வரும் நிலையில் திமுக பிரமுகரே இந்த சம்பவத்தில் குற்றவாளியாக்கப்பட்டுள்ளதால் ஸ்டாலினும், உதயநிதியும் இப்போது வாய் திறந்து பேசுவார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.