1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 20 டிசம்பர் 2017 (11:20 IST)

பரபரப்பு செய்தி: ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு! (வீடியோ இணைப்பு)

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் உள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
 
ஆர்கே நகர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனை படுக்கையில் படுத்தவாறு பழச்சாறு அருந்திக்கொண்டு இருக்கிறார்.
 
இந்த வீடியோ சற்று முன்னர் தான் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் சசிகலா குடும்பத்தின் மீது வைக்கப்பட்ட நிலையில், அவர்கள் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். இது ஆர்கே நகர் இடைத்தேர்தல் தக்கத்தை ஏற்படுத்துமா என பரபரபாக பேசப்படுகிறது.