1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 6 செப்டம்பர் 2017 (05:30 IST)

வம்பை விலை கொடுத்து வாங்கிய கிருஷ்ணசாமி!

அரியலூர் அனிதாவின் மரணத்திற்கு தமிழகமே வருத்தப்பட்ட நிலையில் அவருடைய சாவில் கூட அரசியல் ஆதாயம் தேடும் வகையில் அவருடைய மரணத்தை முதன்முதலில் சந்தேகப்பட்டவர் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமிதான்



 
 
அனிதா தற்கொலைக்கு தூண்டப்பட்டதாகவும், அனிதாவின் மரணத்தை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதன்விளைவாக தகுதியே இல்லாமல் அவருடைய மகள் மெடிக்கல் சீட் பெற்றதாக பாலபாரதி ஒரு உண்மையை போட்டு உடைத்தார்.
 
தற்போது பாலபாரதி கூறியது உண்மை என்பதற்கு ஒரு சாட்சி கிடைத்துள்ளது. சட்டசபையில் கிருஷ்ணசாமி அருகில் உட்கார்ந்திருந்த  மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கிருஷ்ணசாமி குறித்து பாலபாரதி கூறியது முற்றிலும் உண்மை' என்று கூறியுள்ளார்.  அனிதா விஷயத்தில் தலையிடாமல் இருந்திருந்தால் கிருஷ்ணசாமிக்கு இந்த தலைக்குனிவு ஏற்பட்டிருக்காது. தேவையில்லாமல் வம்பை விலைகொடுத்து வாங்கிக்கொண்டதாக கிருஷ்ணசாமிக்கு அரசியல் விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.