1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 9 நவம்பர் 2017 (10:21 IST)

நாஞ்சில் சம்பத் வீட்டிலுமா வருமான வரித்துறை சோதனை?: கசியும் தகவல்!

நாஞ்சில் சம்பத் வீட்டிலுமா வருமான வரித்துறை சோதனை?: கசியும் தகவல்!

சசிகலா, தினகரன் தொடர்புடைய இடங்களிலும், அவரது ஆதரவாளர்கள் வீடுகள் என 187 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் மத்தியில் நாஞ்சில் சம்பத் வீட்டிலும் சோதனை நடைபெறலாம் என தகவல்கள் வருகின்றன.


 
 
இன்று காலை முதலே வருமான வரித்துறையினர்  கொடநாடு எஸ்டேட், சென்னை அடையாற்றில் உள்ள தினகரனின் வீடு, மன்னார்குடியில் உள்ள திவாகரனின் வீடு, தஞ்சையில் உள்ள நடராஜன் வீடு, புதுக்கோட்டையில் அறந்தாங்கி தினகரன் அணியின் மாவட்ட செயலாளர் வீடு, சென்னை தி.நகரில் பரோலில் வெளிவந்த போது சசிகலா தங்கிய சென்னை தி.நகர் கிருஷ்ணப்பிரியா வீடு, சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு, போயஸ்கார்டன் வீட்டில் உள்ள பழைய ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், பெங்களூர் புகழேந்தியின் வீடு, சசிகலாவின் உறவினர்கள் வீடு என மொத்தம் 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
தமிழகம் முழுவதும் இந்த வருமான வரித்துறை சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கன்னியாக்குமரி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய பிரமுகரும், தினகரன் ஆதரவாளருமான ஒருவருடைய வீட்டில் வருமான வருமான வரித்துறையினர் அதிவிரைவில் சோதனை நடத்த உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
முன்னாள் அமைச்சரும், தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான தளவாய் சுந்தரம் குமரி மாவட்டத்தை சேர்ந்த தினகரன் ஆதரவாளர் ஆவார். மேலும் அதிமுக நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தினகரனின் தீவிர ஆதரவாளராக உள்ளார், இவரும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது வீட்டில் சோதனை நடக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருமான வருத்துறை சோதனையை கண்டு தாங்கள் அதிர்ச்சியடையவில்லை எனவும் இது அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும் நாஞ்சில் சம்பத் கூறியிருந்தார்.