வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 10 அக்டோபர் 2019 (12:51 IST)

பொள்ளாச்சி மாணவி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!!!

பொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில் பூசாரிபட்டி என்ற பகுதியில் சாலையோரமாக இளம்பெண் ஒருவர் சடலம் கிடப்பதாக அந்தப் பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ஒருவரை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
பின்னர் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக  புகார் அளித்தவர்களிடம் விசாரித்தனர். அதில் சடலமாகக் கிடந்த பெண், கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து  வந்தது தெரிந்தது.
 
ஏற்கனவே இவரைக் காணவில்லை என அப்பெண்ணின் பெற்றோர் காட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்த பின் தான் போலீஸாருக்குத் தெரிந்துள்ளது.
 
மாணவி வன்புணர்வு செய்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் நான்கு தனிப்படை அமைத்து  குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.இந்நிலையில் முக்கிய குற்றவாளியாக சதீஸ் எனபரை நேற்றுக் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.
 
இந்நிலையில் மாணவி கடைசியாக நின்ற இடத்தில் அவருடைய செல்போன் சிக்னலும் , கைது செய்யப்பட்டுள்ள நபரின் செல்போன் சிக்னலும் ஒரே இடத்தில் இருந்ததை அடுத்து, அவர் கைது  செய்யப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் சிசிடிசி கேமராவில் உள்ள காட்சிகளின் அடிப்படையில் திண்டுக்கல்லை சேர்ந்த சதீஸை கைது திண்டுக்கல் மாவட்டத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.  அதில் சதீஸுக்கு பிரகதியை திருமணம் செய்துவைக்காமல் வேறொருவருடன்  திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் சதீஸ் கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை செய்து வந்தனர்.
 
இந்நிலையில் கைதான சதீஸ் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:
 
பிரகதியும் நானும்  உறவினர்கள் ஆதலால் சிறுவயதில் இருந்தே இருவரும் நெருங்கிப் பழகினோம். ஒருவரை ஒருவர் காதலித்தோம். ஒருகட்டத்தில் அவர் கேட்கும் நகைகள் வாங்கிக் கொடுத்ததுடன் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பணம் செலவழித்தேன். அதனால் கடனாளி ஆனேன்.
 
எனது விருப்பமில்லாமல் வேறு ஒரு பெண்னுடன் எனக்குத் திருமணம் செய்து வைத்தனர் என் பெற்றோர்.  திருமணம் ஆகியிருந்த நிலையில் அத்தை மகளுடன் பேச மறுத்தேன்.

அப்போது பிரகதிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனாலும் என்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி தொல்லை செய்தார்.

இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவரை என்னுடன் அழைத்துச் சென்று கொலை செய்து சாலையோரமாய் வீசி விட்டதாகத் தெரிவித்துள்ளார். 
 
மேலும் அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.