‘தளபதி 63’ க்காக பிரமாண்டமாக தயாராகி வரும் ஃபுட்பால் ஸ்டேடியம் செட்!

Last Updated: திங்கள், 8 ஏப்ரல் 2019 (12:07 IST)
தளபதி 63 படத்திற்காக பிரமாண்டமான அளவில்  கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.
 
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.
 
விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார்.
 
விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு காபந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், இந்த படம் பெண்கள் கால்பந்து போட்டியை பற்றிய கதையாக இருக்கும் என ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகின. 
 
அதற்காக கால்பந்தாட்டதை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் முக்கிய காட்சிகள் கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற இருப்பதால் அதற்கான பிரம்மாண்ட செட்டை படக்குழு அமைத்து வருகிறது.
 
சென்னை அருகே உள்ள ஈ.வி.பி ஸ்டுடியோவில் பிரமாண்ட கால்பந்தாட்ட மைதானம் அமைக்கும் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளதால் அடுத்த சில நாட்களுக்கு விஜய் உட்பட படகுழுவினர் இங்குதான் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
 
இந்த பிரமாண்ட  ஃபுட்பால் ஸ்டேடியத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது


இதில் மேலும் படிக்கவும் :