சர்வதேச வேட்டி தினம் இன்று !
உலகம் முழுவதும் இன்று வேட்டி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழர்களின் பாரம்பரியமான உடையான வேட்டி காலப்போக்கில் அரசியல் வாதிகளின் அடையாளமாகவும், திருமணம் போன்ற விழாக்களின் போது அணியும் உடையாகவும் மட்டுமே மாறிப் போனது. ஆனால் இப்போது சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் வேட்டி கட்டுவது குறித்த ஆர்வம் அதிகமாகியுள்ளது. அதற்கு தற்போதைய சினிமாக்களும் முக்கியக் காரணமாக அமைகின்றன.
நடிகர் அஜித் சமீபகாலமாக சில படங்களில் வேட்டி சட்டையோடு சில படங்களில் நடிக்க அவரது ரசிகர்கள் அதிகளவில் அதைப் பின்பற்ற ஆரம்பித்தனர். அதைப் போலவே விஜய், ரஜினி , கமல் மற்றும் தனுஷ் ஆகியோரும் சில படங்களில் வேட்டி சட்டையோடு நடித்தனர். இதனால் அதிகளவில் இப்போது வேட்டி கட்டும் பழக்கம் அதிகமாகியுள்ளது. இன்று உலக வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது.