வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 ஜனவரி 2021 (22:05 IST)

எனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்தது இவர்தான் - கமல்ஹாசன்

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அத்தனை கட்சிகளும் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில்,கமல்ஹாசன் இன்றைய பிரசாரத்தில் எம்ஜிஆர் தனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திராவிட கட்சிகளுக்குப் போட்டியாக கமல்ஹாசன் தேர்தலை சந்திக்கவுள்ளார்.

அவருக்கு எதிராக அதிமுக அதிக விமர்சனங்களைத் தெரிவிக்க கமலும் கடுமையாக விமர்சித்து, சமீபத்தில் லஞ்சப்பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.அவர் செல்லுமிடமெல்லாம் பிரச்சாத்தின்போது, மக்கள் கூட்டம் கூடுகின்றனர்.

இந்நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் தொழிற்சங்கம் ரயில்வே துறையின் ஐசிஎஃப் தொழிற்சாலையில் ஐசிஎஃப் தொழிற்சங்கம் என பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
எனவே நடிப்பில் மக்களிடம் மனதில் இடம்பிடித்துள்ள கமல்ஹாசன், அரசியலில் ஆட்சி செய்யும் வகையில் தனது ஒவ்வொரு முயற்சியை எடுத்துவருகிறார்.

இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் கமல்ஹாசன், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அன்னசாகரம் பகுதியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய சுதந்திர போராட்டத் தியாகி சுவகாகி அம்மையாளரைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் கமல்ஹாசன் தனக்கு எம்.ஜி.ஆர்தான் நீச்சல் கற்றுக்கொத்தால் எனவும், நல்லவர்கள் யாரும் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடலாம் எனவும், அவரை யாரும் பட்டா போட்டு வைத்துக்கொள்ள முடியாது எனவும் தெர்வித்தார்.